TET Singer Junior Season III 2024

SCWAC – TET/HD தொலைக்காட்சி இணைந்து வழங்கும் Singer Junior 2024-- பாடல் போட்டியின் குரல்தேர்வு (Audition) குதூகல ஆரம்பம்! கனடாவின் முன்னணி தமிழ் தொலைக்காட்சியான TET/HD யின் தயாரிப்பான, பலரது அபிமானத்தைப் பெற்ற Singer Junior பாடல் போட்டி நிகழ்ச்சியின் 2024 ஆம் ஆண்டுக்கான குரல் தேர்வு(Audition) ஆரம்பமாகியுள்ளது என்பதை பெருமையுடன் அறியத்தருகினறோம் கடந்த இரு வருடங்களாக இடம்பெற்ற 2022 - 2023 ஆம் ஆண்டுகளுக்கானSinger Junior பாடல் போட்டி நிகழ்ச்சியில் பல பிள்ளைகள் ஆர்வத்தோடு கலந்து சிறப்பித்திருந்தார்கள். பல சுற்றுக்கள் இடம்பெற்று, அவற்றில் முன்னிலை வகித்த பிள்ளைகளுக்கு பணப்பரிசில்கள் வழங்கப்பட்டன. முதல் இடத்தைப்பெற்று Singer Junior -2022 – 2023 பட்டத்தை வென்ற போட்டியாளர்களுக்கு ஸ்காபரோ முற்றவெளி அரங்கில் இடம்பெற்ற Grand Finale யின் பிரமாணட இசை நிகழ்வில், 2000 டொலர்கள் முதல் பரிசாக வழங்கப்பட்டன. கடந்த முறையைப் போன்றே, 2024ஆம்ஆண்டின் (Season-3) போட்டிகள் இசையின் மேல் ஆர்வமுள்ள பிள்ளைகளின் பங்குபற்றுதலோடும், அவர்களின் திறமையில் நம்பிக்கை வைத்த பெற்றோரின் ஆதரவோடும் ஆரம்பமாகியுள்ளது. இன்றைய தினம் TET/HD தொலைக்காட்சி கலையகத்தில் Singer Junior – Season 3 பாடல் போட்டியின் குரல் தேர்வுக்கான (Audition) ஆரம்ப நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது. ஐந்து வயதுக்கும், பதினெட்டு வயதுக்கும் உட்பட்ட பல போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். தங்கள் பிள்ளைகளின் திறமைகளை பார்வையிடுவதற்காகவும், அவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் பெற்றோர்,உறவினர் நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தார்கள். 'உயிர்த்த ஞாயிறு' புனித தினத்தில் இந்த குரல் தேர்வு ஆரம்பமானது சிறப்பம்சமாகும். திருமதி ரேகா சிவா,நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.அனைவரும் அன்புடன் வரவேற்கப்பட்டு, கௌரவ நடுவர்களின் அறிமுகத்தோடு ஒளிப்பதிவு ஆரம்பமானது.சிறந்த இசைஞானம் உள்ளவர்களான, Rajganesh , Annanathan, Praba ஆகியோர் நடுவர்களாக பொறுப்பேற்றிருந் தார்கள். குரல் தேர்வுக்கான முதல்நாள் ஒளிப்பதிவின் போது பங்குபற்றிய பிள்ளைகள் அனைவருமே வியக்கத்தக்க வகையில் தங்கள் பாடல் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தார்கள். வார்த்தைகளை தவறவிடாமல்,பாடலை முழுமையாக மனனம் செய்து, ராகத்தோடு பாடிய அவர்களது முயற்சியையும் திறமையையும் பாராட்டியே ஆகவேண்டும். போட்டி என்பதால்,அடுத்தடுத்த சுற்றுகளில் அவர்களது ஆற்றல் மேலும் வெளிப்பட வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இடம்பெற இருக்கும் ஏனைய சுற்றுக்கள்: 2.Sad Round, 3) Melody Round, 4) Happy Round,,4) Duet Round 5) Devotional Round,6) Fast Beat Round,7) Dedication Round ???? Folk Round. 9) Wild card Round 2024 ஆம் ஆண்டுக்கான Singer Junior - Season 3 இறுதிச் சுற்றுக்கான போட்டி ((Grand finale))இம்முறை பிரமாண்ட உள்ளரங்க மேடையில் கோலாகல இசை நிகழ்ச்சியாக இடம்பெற உள்ளது. July-07 Chinese Cultural Centre of Greater Toronto 5183 Sheppard Avenue East,Scarborough, Ontario, M1B 5Z5 இடம்பெறும் இறுதித் தெரிவில் முதாலாவது இடத்தைப் பெறும் போட்டியாளருக்கு இம்முறையும் 2000 டொலர்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது. அடுத்து 2, 3ம் இடம் வருபவர்களுக்கு தலா ஒரு பவுண் தங்கநாயணம் வழங்கப்படும். மற்றும் சிறப்புப்பரிசுகள் காத்திருக்கின்றன.

TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024
TET Singer Junior Season III 2024